ஆலிம்களுடன் நேர்காணல்கள்
அறிமுகம்
Noorasian (Private) Limited ஒரு வியாபார ஆலோசனை வழங்கும் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இயக்குனர் அபூபக்ர் இஸ்மாயில்.
Noorasianயின் சமூக சேவை கிளையின் ஊடாக. சமூகத்தில் ஏற்படுகின்ற அதிவேக மாற்றங்களையும் எதிர்கொள்கின்ற சவால்களையும் ஆழமாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் சமகால இலங்கையில் பொருளாதார மாற்றங்களும் இன்றைய உலக தொழில்நுட்ப மாற்றங்களும் சமூகத்தை வழி நடத்துகின்ற ஆலிம்களுக்கு பல்வேறு சவால்கள் உருவாக்கியுள்ளது.
நவீன சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமுதாயத்திற்கு தங்களுடைய வழிகாட்டு ஆரோக்கியமான முறையில் தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு எங்களால் ஆன பங்களிப்பை வழங்கும் வகையில் சில செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.
இத்திட்டத்தின்: திட்டமிடல் மற்றும் ஆய்வாளர்
அபூபக்ர் இஸ்மாயில்.
BBM University of Kelaniya, MBA University of West London. PGD in Islamic Finance (B&I) UK, CPA,CPM,CIMA(ACMA)
எமது கடந்தகால வேலைத்திட்டங்கள்.
ஆலிம்களுக்கான இலவச செயலமர்வு: சமூக ஊடகங்களை வினைத்திறனான முறையில் பயன்படுத்துவது எவ்வாறு.
பதிவுசெய்த ஆலிம்களின் எண்ணிக்கை 116. கலந்து கொண்ட ஆலிம்களின் எண்ணிக்கை 45
நிகழ்ச்சியின் இறுதியில் பின்னூட்டல் (feedback) மூலம் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் 89/100
எதிர்கால செயற்திட்டங்கள்
நடைமுறை சார் வியாபார பாடநெறிகளையும், சமூக வலைத்தளங்களின் ஊடாக தங்களுடைய வழிகாட்டல்களை சமூகத்திற்கு வினைத்திறனான முறையில் கொண்டு செல்லக்கூடிய வழிகாட்டு பாடநெறிகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம்.
- Diploma in Practical Business Management
- Certificate in Social Media Marketing (Specialised for Religious Preaching)
பாடநெறிக்கான அங்கீகாரம்: அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஒன்றினால் வழங்கப்படும். எதிர்காலத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு கல்லூரியின் வழங்கப்படும்.
இந்த செயற்றிட்டம் பற்றிய ஆலிம்களின் அபிப்பிராயங்களை நாம் நேர்காணலின் ஊடாக சேகரிக்கிறோம்.
கேள்விகள்
1. உங்கள் பார்வையில் இவ்வாறான பாடநெறிகள் தேவையா ?
2.ஆலிம்கள் எதிர்கொள்கின்ற முதன்மையான சவால்களாக எவற்றை நீங்கள் கருதுகிறீர்கள்?
3. ஆலிம்கள் சமூக ஊடகங்களின் ஊடாக சமூகத்திற்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டியது அவசியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா ?
4. ஆலிம்களுக்கு வியாபாரம் சார் நடைமுறை அறிவு அவசியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா ?
5. இப்பாடநெறியை எவ்வாறு கொண்டு செல்லலாம்?
6. பாடநெறியை நடத்தும் போது நாம் எதிர் கொள்ளக்கூடிய சவால்கள் என்ன?
7. பாடநெறியை வெற்றிகரமாக நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?
8. இப்பாடநெறியைக் கற்பதற்கு ஆலிம்கள் முன்வருவார்களா? அல்லது இது தோல்வி அடையும் சந்தர்ப்பங்கள் எவை?
9. இப்பாடநெறியை சந்தைப்படுத்துவதற்கும் வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கும் எவ்வாறான இலகுவான முறைகளைப் பயன்படுத்தலாம்? அல்லது எந்த நிறுவனங்களோடு இணைந்து இதனை மேற்கொள்ளலாம்?
10. இதில் எவ்வாறான பகுதிகளை உள்ளடக்கலாம்?
11. ஆலிம்கள் வியாபார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேற்றம் அடைவது சம்பந்தமான உங்களது தனிப்பட்ட அபிப்ராயங்கள்.